தடுப்பூசிகள் வைரஸின் பிரதிபலிப்பாகும். எனவே, இது உடலில் செலுத்தப்படும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு பதிலளித்து உடலை நோய்க்கிருமியிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறது. இது பல்வேறு எதிர்வினைகளுக்கு வழிவகுக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலே கைகளில் வீக்கம், வலி உண்டாவது சகஜம். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போட்டாலும் வலி தாங்க முடியாமல் வீர் வீரென்று அழுதுகொண்டே இருக்கும். ஆனால் இந்த வலி ஏன் உண்டாகிறது என்பது தெரியாது. அப்படி கொரோனா தடுப்பூசி போட்டதும் வலி ஏன் உண்டாகிறது என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. உங்களை தெளிவு படுத்தவே இந்தக் கட்டுரை.
கொரோனா தடுப்பூசி போட்டதும் போட்ட இடத்தில் வலி உண்டாகும். ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் அடுத்த நாள் கைகளை தூக்க முடியாத அளவிற்கு வலி இருக்கும். அவ்வாறு வலி உண்டாவதற்கு காரணம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியாது தடுப்பூசியுடன் செயலாற்றுகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி கைகளில் வலி , காய்ச்சல் உண்டாகிறது எனில் நோய் எதிர்ப்பு சக்தி நன்கு வேலை செய்கிறது. போடப்பட்ட ஊசி உடலில் வேலை செய்கிறது என்று அர்த்தம்.
தடுப்பூசிகள் வைரஸின் பிரதிபலிப்பாகும். எனவே, இது உடலில் செலுத்தப்படும்போது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு பதிலளித்து உடலை நோய்க்கிருமியிலிருந்து பாதுகாக்க முயற்சிக்கிறது. இது பல்வேறு எதிர்வினைகளுக்கு வழிவகுக்கிறது.
COVID தடுப்பூசிகள் இன்ட்ராமுஸ்குலர் ஊசி (intramuscular injections) மூலம் வழங்கப்படுவதால், அதாவது நேரடியாக தசைகளுக்குள் செலுத்தப்படுவதால், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கத்தைத் தூண்டுகிறது. கூடுதலாக, ஊசி ஏற்படுத்தும் வலி, காயத்தாலும் வீக்கம் இருக்கலாம்.
தடுப்பூசி போட்ட பிறகு இரண்டு நாட்கள் கைகளில் வலி, விக்கம் இருப்பது சாதாரண விஷயம்தான். எனவே அதனால் பயப்படத் தேவையில்லை. அவ்வாறு வலி இருக்கும்போது இலகுவாக இருக்க ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் அந்த இடத்தில் இரத்த ஓட்டம் சீராகி வீக்கத்தை குறைக்கலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் அந்த வலி , வீக்கம் என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது என்பதே காரணம்.
கையில் வலி, வீக்கத்தை தாண்டி சிலர் காய்ச்சல், சோர்வு, குமட்டல் முதல் உடல் வலி வரை பல அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். இவை தவிர, தடுப்பூசி போட்ட இடத்தில் அரிப்பு, சிவத்தல், வீக்கம் போன்றவற்றையும் பலர் அனுபவித்திருக்கிறார்கள். ஒருவேளை நிலைமை உங்கள் கட்டுப்பாட்டை மீறி அதிகமானால் மட்டுமே மருத்துவமனை செல்லுங்கள்.