துபாயின் முஹைசினா பகுதியில் இறந்து கிடந்த ஒரு உடலை அடையாளம் காண உதவுமாறு துபாய் காவல்துறையினர் குடியிருப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மணல் நிறைந்த இடம் ஒன்றிலேயே குறித்த ஆசிய நாட்டைச் சேர்ந்தவர் இறந்து கிடந்துள்ளார்.
இவர் ஆசிய நாட்டவர் என்பதைத் தவிர அவரது உடலில் வேறு எந்த அடையாள ஆவணங்களும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் தற்போது தடயவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இவரைப் பற்றிய தகவலேதும் யாருக்காவது தெரிந்தால் காவல்துறையின் இலவச எண் 901 ஐ அழைத்து தகவல் வழங்குமாறு துபாய் காவல் துறை கேட்டக் கொண்டுள்ளனர்.
செய்தி மூலம் - https://gulfnews.com