தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டினர் தங்களை இகாமாவை அது காலாவதியாவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் கண்டிப்பாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் அது உரியவரை நாடுகடத்த வழிவகுக்கும் என சவுதி அரேபிய ஜவசாத் அலுவலகம் (The General Directorate of Passports - Jawazat) தெரிவித்துள்ளது.
தங்களிடம் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளியின் இகாமாவினை புதுப்பிக்கத் தவறும் நிறுவனம் அல்லது முதலாளிகளும் தண்டப்பணம் செலுத்த நேரிடும்.
இகாமாவினை புதுப்பிக்கத் முதற்தடவையாக தவறினால் 500 ரியால் அபராதமும், இரண்டாவது தடவையும் தவறும் பட்சத்தில் 1000 ரியால் அபராதமும், மூன்றாம் தடவையும் தவறினால் தொழிலாளி நாடுகடத்தப்படுவார் எனவும் ஜவசாத் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
சவுதியில் உள்ள இந்திய மற்றும் இலங்கைத் தமிழ் சகோதரர்கள் உங்களது இகாமா காலாவதியாவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும், காலாவதியாகும் உங்களது இகாமா தொடர்பில் உங்களின் நிறுவனம் அல்லது முதலாளிகளிடம் எத்திவையுங்கள்.