( எம். என் . எம். அப்ராஸ்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள 13 சுகாதார வைத்தியபிரிவுகளில் இரண்டாவது தடவையாக கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று (29) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார அலுவலக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ. ஆர்.எம். அஸ்மி தலைமையில்கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று தொடக்கம் (29 ம் திகதி முதல் -ஆகஸ்ட் 01ம் திகதி வரை) இடம்பெறவுள்ளது.
01. கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலை,
02. கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய பாடசாலை ,
03. கல்முனை அல் - பஹ்ரியா தேசிய பாடசலை,
04. மாவட்ட வைத்தியாலை- மருதமுனை
05. மருதமுனை அல்- மனார் (ஆரம்ப பிரிவு ) பாடசலை
06. மருதமுனை அல் - மதினா பாடசாலை,
07. நட்பிட்டிமுனை அல்- அக்ஸா மத்திய மகா வித்தியாலயம்
என தெற்கு சுகாதார பிரிவில் 07 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை முதல் தடவையாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு 50,000 சினோபார்ம் தடுப்பூசிகள்
கிடைக்கப் பெற்றதுடன் , இதில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் 4700 பேருக்கு தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளதாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி தெரிவித்தார்.