குவைத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த ஃபரா ஹம்சா அக்பர் கொலை வழக்கில் விசாரனை அனைத்தும் முடித்து 77-வது நாளான நேற்று (06/07/21) செவ்வாய்க்கிழமை குற்றவாளியை தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்ற குவைத் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான பைசல் அல் ஹராபி அவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பைக் கேட்க நேற்று காலை முதலே பல பெண்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளுடன் நீதிமன்றத்தின் முன்னர் கூடியிருந்தனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை கேட்ட பின்னர் ஃபரா ஹம்சா அக்பரின் சகோதரி மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
கடந்த புனித ரமலான் மாதத்தில் பகல் நேரத்தில் நடந்த இந்த கொடூரமான படுகொலை நாட்டையே உலுக்கியது. 31-வயதான பெண்ணை காதலை மறுத்த காரணத்திற்காக குற்றவாளி குவைத்தின் Sabah Al Salem என்ற பகுதியில் இருந்து காரில் கடத்திச் சென்று பின்னர் வாகனத்தில் வைத்து படுகொலை செய்துள்ளான்.
உயிரிழந்த பெண் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடந்த நேரத்தில், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த இளம் பெண் குற்றவாளியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.