இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், யுனைடெட் கிங்டம் மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகளில் இருந்து பயணிகள் ஓமான் வருவதற்கு ஓமான் அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ஓமான் அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
விமான இடைநீக்கத்திற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற நாடுகள் துனிசியா, லெபனான், புருனே, இந்தோனேசியா, எத்தியோப்பியா, ஈரான், அர்ஜென்டினா, பிரேசில், சூடான், ஈராக், பிலிப்பைன்ஸ், தான்சானியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், கானா, சியரா லியோன், கினியா , கொலம்பியா, நைஜீரியா மற்றும் லிபியா ஆகியவை அடங்கும். இதில் ஒரு சில நாடுகளுக்கு ஏற்கெனவே பயணத்தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.
https://www.khaleejtamil.com/