Ads Area

சாய்ந்தமருது சமூக பராமரிப்பு நிலையத்தில் சிரமதானப் பணி.

 நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது இளையதம்பி சமூக சேவைகள் அமைப்பின் அனுசரனையில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் கீழ் இயங்கும் சாய்ந்தமருது சமூக பராமரிப்பு நிலையத்தில் பராமரிப்பு நிலையத்தின் தலைவரும் சமூக சேவை உத்தியோகத்தருமான ஏ.ஏ. சபீரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் ITF இளையோர் வட்ட அமைப்பினர்  நேற்று சனிக்கிழமை சிரமதானப் பணியொன்றை மேற்கொண்டனர்.

சாய்ந்தமருது சமூக பராமரிப்பு நிலைய ஊழியர்களும், ITF இளையோர் வட்டத்தின் தலைவர் எம்.எம்.எம். றிப்னாஸ் செயலாளர் ஐ.டீ.எம்.ஹஸான் அமைப்பாளர் எம்.எப்.எம். ஹாஜித் பொருளார்  எம்.எம்.எம். ஹிலால் மற்றும் பதீன் அணியினர் உட்பட பலரும் கலந்து கொண்டு சிரமதானப்பணியை மேற்கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe