சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவில் உள்ள 13 சுகாதார வைத்தியபிரிவுகளில் இரண்டாவது தடவையாக கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று (29)முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் சம்மாந்துறை வைத்திய சுகாதார பிரிவிவுகளில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இன்று தொடக்கம் (29ம் திகதி முதல் -ஆகஸ்ட் 02ம்திகதி வரை)இடம்பெறவுள்ளது.
சம்மாந்துறை அல் மர்ஜான் மகளீர் பாடசாலை ,சம்மாந்துறை அல் - முனீர் பாடசாலை ,சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபம்,சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலாயம் என சம்மாந்துறை சுகாதார பிரிவில் 04 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் பொது மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியினை பெற்றுக் கொண்டனர்.
தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் கிராம சேவகர் ரீதியாக பிரிக்கப்பட்டு காலம், நிலையம் என்பன குறிப்பிடப்பட்ட அட்டவணை ஒன்றினை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.