Ads Area

சம்மாந்துறையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை வியாழக்கிழமை (29) ஆரம்பம்.

சம்மாந்துறையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்: கால தாமதமின்றி பெற்றுக்கொள்ளுமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய  அதிகாரி வேண்டுகோள்!

சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)

சம்மாந்துறை பொதுமக்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை (29) ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் கிராம சேவக ரீதியாக பிரிக்கப்பட்டு காலம், நிலையம் என்பன குறிப்பிடப்பட்ட அட்டவணை ஒன்றினை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வெளியிட்டுள்ளது.

குறித்த அட்டவணையின் பிரகாரம் 29, 30, 31,01,02 ஆம் திகதிகளில்  பொதுமக்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ஐ.எம் கபீர்  கேட்டுக் கொண்டுள்ளார்.

வீட்டிலிருந்து வரும் போது தங்களது பெயர், விலாசம், அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி எண் போன்ற தகவல்களை எழுதி கொண்டு வந்து தடுப்பூசி நிலையத்தில் ஒப்படைப்பதன் ஊடாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும்  மேலும் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe