நூருல் ஹுதா உமர்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், நாவிதன்வெளி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறை . கலைஞர்களுக்கான உதவித்தொகை காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (2021.07.12) பிரதேச செயலாளர் எம்.எஸ்.ராங்கநாதன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸ் இன் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்விற்கு அம்பாரை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரின்ஸான் உடப்பட கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறை சார்ந்த 04 கலைஞர்களுக்கு தலா ரூபா பத்தாயிரம் பெறுமதியான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.