தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபிய ரியாத் நகரில் இடம் பெற்ற வாகன விபத்தில் 9 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது, அதில் 8 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். கடந்த ஹஜ் பெருநாள் விடுமுறை தினத்தில் பயணம் மேற்கொண்டவர்களே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பெருநாள் தினத்தன்று ரியாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பனி தமீம் என்ற ஊரிலுள்ள தங்களது உறவினர் வீடு ஒன்றுக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் காரில் பயணித்துள்ள நிலையில் இவர்களது காரும் எதிரே வந்த காரும் மோதியதினால் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் எதிரே வந்த காரில் இருந்த ஒருவரும், உறவினர் வீட்டுக்குச் சென்ற 8 பேருமாக மொத்தம் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.