சம்மாந்துறை அன்சார்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 26 ஆண்களும் 16 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டதற்காக பத்து (10) வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத கூட்டங்கள் போன்ற தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் முலும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk