குவைத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை காக்கும் நோக்கின் அடிப்படையில் கடந்த ஆறு மாத காலமாக வெளிநாட்டவர்கள் குவைத்திற்குல் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையினை குவைத் அரசாங்கம் நேற்று (01) முதல் முழுமையாக நீக்கியுள்ளது.
இதனடிப்படையில் மீண்டும் குவைத்தின் குடியிருப்பாளர்கள் குவைத்திற்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கொரோனாவிற்கெதிராக குவைத் அரசு அங்கீகரித்துள்ள தடுப்பூசி போட்டவர்களுக்கே குவைத்திற்குள் நுழைய அனுமதி என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இருப்பினும் இந்தியாவில் இருந்து குவைத்திற்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று அரசின் சார்பாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து குவைத் பயணிக்கவுள்ளவர்கள் வேறொரு நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.