தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவில் வெளிநாட்டினருக்கான உம்ரா பயணத் தடை நீக்கப்பட்டதனையடுத்து உம்ரா கடமைக்காக வருகை தந்த வெளிநாட்டு யாத்தீரிகள் குழு ஒன்றினை சவுதி அரேபிய அதிகாரிகள் விமான நிலையத்தில் பேரீச்சம் பழங்கள், மலர்கள் மற்றும் ஸம் ஸம் தண்ணீர் கொடுத்து வரவேற்றுள்ளனர்.
உம்ரா கடமையினை நிறைவேற்ற சவுதி அரேபியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகள் முழுமையாக 2 தடுப்பூசிகளை பெற்றிருத்தல் வேண்டும் அத்தோடு சவுதி அரேபியாவிற்கு வருகை தந்தவுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் மோடோர்னா - Moderna, பைசர் - Pfizer-BioNTech, ஜோன்சன்-ஜோன்சன் - Johnson & Johnson and அஷ்ட்ரா - AstraZeneca ஆகிய தடுப்பூசிகளே சுகாதாரத்துறையினரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.