தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியா விதித்துள்ள பயணத் தடையை எதிர்கொள்ளும் நாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரின் இகாமா (residency permits), எக்சிட் விசா (Exit Visa), மறுநுழைவு விசா (Re-entry Visa) அதே போல் விசிட் வீசாக்கள் போன்றவை எதிர்வரும் செப்டம்பர் 30ம் திகதி வரை இலவசமாக நீடிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன.
சவுதி அரேபிய மன்னரும், புனித மக்கா-மதினா பள்ளிவாசல்களின் பாதுகாவலருமான மன்னர் சல்மான் அவர்களின் உத்தரவின் பேரிலேயே விசாக்கள் இவ்வாறு இலவசமாக நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விசாக்கள் தானாகவே (automatically) நீடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.