Ads Area

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட போதிலும், நெடுஞ்சாலை அமைச்சு  மற்றும் சாலை  வீதிஅபிவிருத்தி அதிகார சபை என்பன  நாடு முழுவதும்  ஆரம்பித்துள்ள அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்கள் உட்பட அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும்  வழமைபோன்று  தொடர்ந்து மேற்கொள்ளப்படும் -  நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  நோய் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போதிலும் வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் கோவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக  நிறுத்தப்படவில்லை என்று நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ    கூறியுள்ளார்.

நாட்டில் தற்போதைய தொற்றுநோய் நிலைமையை  கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும்,  அபிவிருத்தித் திட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையை சமர்ப்பித்து  எந்த  இடையூறும் இல்லாமல் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்ப முடியும் என்றும்  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை  நிர்மாணப் பணிகள், புதிய களனி பாலம் திட்டம், 5000 கிராமியப் பாலங்கள் நிர்மாணிக்கும் திட்டம், 100,000 கி.மீ.  அபிவிருத்தி செய்யும் திட்டம் போன்ற  அபிவிருத்தித் திட்டப் பணிகள் சுகாதாரத் தரப்பு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொற்றுநோய் நிலைமை இருந்தபோதிலும், சுகாதாரத் துறையின் ஆலோசனைகள் மற்றும்  வழிகாட்டுதல்களின்படி இதுவரை  அபிவிருத்தி  செய்துள்ள  திட்டங்களை எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து Zoom தொழில்நுட்பத்தின் வாயிலாக  2021-08-20 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நெடுஞ்சாலை அமைச்சருமான  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்ட கருத்துக்களை  தெரிவித்தார்.

நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் மற்றும்  வீதி அபிவிருத்தி அதிகார சபை  அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றார்கள்.

ஊடகப் பிரிவு 

நெடுஞ்சாலை  அமைச்சு

0112868710



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe