தகவல் - சம்மாந்துறை அன்சார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பினால் (OIC) ஆப்கானிஸ்தானின் நிலைமை தொடர்பில் ஆராய விசேட கூட்டம் ஒன்று அண்மையில் நடாத்தப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் டாக்டர். யூசுப் அல்-ஒதைமீன் ஆப்கானிஸ்த்தானில் மனிதாபிமான சட்டம் மற்றும் வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து ஒரு விரிவான உரையாடலையும், நல்லிணக்கத்தையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.