முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக சி.சி.டி.வி. கெமரா வில் இல்லை என பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சி.சி.டி.வி. கெமராக்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் டயகம சிறுமி தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படும் காட்சிகள் மற்றும் தீ அணைக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் எதுவும் அந்த சி.சி.டி.வி. கெமராவில் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டயகம சிறுமி உடலில் தீ பற்றிக் கொண்டபோது சமையலறை அருகில் இருந்தவர்கள் அதனை அறிந்து குறித்த தீயை அணைத்தார்கள் என்றும் அதன் பின்னர் ரிஷாத் வீட்டுக்கு முன்னால் இருந்த நீர் தடாகத்தில் குறித்த சிறுமி ஓடிச் சென்று குதித்து சிறிது நேரம் இருந்ததாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதனை உறுதி செய்ய அந்த நீர் தடாகத்தின் அருகிலிருந்த சி.சி.டி.வி. கெமரா செயலிழந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த இடத்தில் பொருத்தப்பட்ட கெமரா செயலிழந்துள் ளமை தொடர்பாக பொலிஸார் ரிஷாத் மனைவியிடம் கேட்டபோது, ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ள தால் புதிய கெமரா பொருத்த முடியாமல் போனது என் றும் அவர் இல்லாததால், தொழில்நுட்ப வல்லுநர்கள் எவரையும் வெளியிலிருந்து வீட்டுக்குள் அழைத்து வரவில்லை என்றும் அவர் கூறியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரிஷாத் வீட்டில் 16 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு 14 கெமராக்கள் மட்டும் இயங்கியதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
நன்றி - தினக்குரல்