ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை கட்சியின் தலை ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று திருகோணமலையில் வைத்து மேற்கொண்டிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்தீன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்த அறிவிப்பினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அவர்களும் தனது உத்தியோகபூர்வ முகநுாலில் பதிவிட்டுள்ளார்.
வீடியோவுக்கு - https://www.facebook.com/thowfeek.mohamedshariff/videos/209646584441667