மாளிகைக்காடு நிருபர்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் வீதிகளை காபட் வீதிகளாக செப்பனிடும் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச உள்ளக வீதிகள் சிலவற்றை செப்பனிடும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றது.
தேசிய காங்கிரஸின் பிராந்திய முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது உறுப்பினர்கள் என பலரும் தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசின் பேரில் இந்த வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளது. இது தொடர்பிலான களவிஜயமும், செயற்திட்ட ஆய்வும் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினர், கல்முனை மாநகர சபை சாய்ந்தமருது உறுப்பினர்கள் என பலரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
மக்களின் அதிக பாவனையை கொண்ட சாய்ந்தமருதின் முக்கிய வீதிகள் பலதும் இந்த வேலைத் திட்டத்தினூடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.