நூருல் ஹுதா உமர்
கொரோணா தொற்று பரவல் நிலைமை தற்போது தீவிரமடைந்து வருவதால் இது குறித்து மக்களுக்கு விழிப்பூட்டும் செயல்பாடுகளை நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலை தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது என நிந்தவூர் அரசாங்க ஆயுள்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே எல் நக்பர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதற்கான விழிப்பூட்டும் செயற்பாடுகள் அம்பாறை மாவட்டம் முழுவதிலும் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அத்துடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் "சுவதரணி" மருத்துவ பானங்களும் வழங்கி வைக்கப்பட்டு வருவதாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே எல் நக்பர் மேலும் தெரிவித்தார்.