சம்மாந்துறை அன்சார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்தும் வரும் விமானங்களை ஐக்கிய அரபு இராஜ்ஜிய எமிரேட்ஸ் நிறுவனம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குச் செல்ல விமான டிக்கட்களை பதிவு செய்துள்ளோர் உரிய டிக்கட் முகவர் நிலையங்களுக்குச் சென்று விமானப் பயண டிக்கட்களை ரீ புக் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
தாலிபான்கள் படையினர் ஆப்கானிஸ்தான் காபூல் தலைநகருக்கு நுழைந்ததனையடுத்தே எமிரேட்ஸ் நிறுவனம் இவ்வாறு பயணத் தடை விதித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com