Ads Area

இந்த கோவிட் தொற்றை எதிரணி அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தியுள்ளது - அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.

20-08-16 2021 நடைபெற்ற  கட்சித் தலைவர்  கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளித்தார்.

ஊடகவியலாளர் கேள்வி - நாட்டின் சில பகுதிகளில் கடைகள்  மூடப்படுகின்றனவா?

மக்கள் கடைகளை மூடுவதற்கு முன், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போது அதனை  ஆதரிக்காமல்  அவற்றை  நிறுத்த நினைத்திருக்க வேண்டும். 

ஆனால்   இது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் என்று கூறி   அந்த நேரத்தில் அதற்கு ஒத்துழைப்பாக மக்கள் நடந்தார்கள்.  அந்த சமயத்தில்  தான்  அந்த கடைகளை மூடியிருக்க  வேண்டும்.  இதுபோன்ற போராட்டங்களை நடத்த வேண்டாமென்று கோரியே கடைகள்  மூடப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அப்படி ஏதாவது செய்து  இந்த போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காதிருந்திருக்கலாம். ஆனால் அப்போது அவர்கள் அதைச் செய்யவில்லை. இவற்றின்   பின்னணியில்  அரசியல் இருக்கிறது.  வேறு  கருத்தொன்றை உருவாக்கவே  முயற்சிக்கின்றனர். இந்த நாட்டை  செயலிழக்கச் செய்வதே இதன் நோக்கம்.  சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி  செயல்படாத நபர்கள் தான்  இதனையும்  செய்கின்றனர்.

ஊடகவியலாளர் கேள்வி - நாளாந்தம்  கோவிட் தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 160 க்கும் அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன ?

எனது தனிப்பட்ட கருத்து இங்கு முக்கியமில்லை. இவ்வாறு நடக்குமென்று முன்கூட்டியே அறிந்திருந்தோம். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்   காரணமாக கோவிட் கொத்தணி ஏற்படும் என்பதை அறிந்திருந்தோம்.  அந்த நிலை ஏற்படுவதை தடுக்க முற்பட்டத போது   தங்களின்  போராட்டத்தை நாங்கள் அரசியல் ரீதியாக நிறுத்தப் போவதாக  கருத்தை உருவாக்கினார்கள். இன்றும் அதையே செய்கிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல. மக்களின் பிணங்களை வைத்தாவது  அரசியல் செய்வதையே எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.இந்த கோவிட் தொற்றை எதிரணி அரசியல் லாபத்திற்கு   பயன்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர் கேள்வி - ஏழு அமைச்சரவை அமைச்சுக்கள்  மாற்றப்பட்டுள்ளன. கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று சுகாதார அமைச்சராக உள்ளார். சுகாதார அமைச்சை மாற்ற வேண்டிய  தேவைக்காகவா ஏனைய  அமைச்சுகளும் மாற்றப்பட்டனவா ?

ஜனாதிபதிக்கு  எந்த நேரத்திலும் அமைச்சரவை மாற்றங்களை செய்யலாம். இன்றிரவும் கூட மாற்றம்  செய்யலாம். அதை நாளையும் செய்யலாம். 

அதை மறுநாள் கூட  செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். இது ஒன்றும் புதிதல்ல. இது போன்ற விடயங்கள் வரலாறு முழுவதும் நடந்துள்ளன. 

இது அதிகம் யோசிக்க வேண்டிய விஷயம் அல்ல. நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையைப் வழங்குவதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்  என்று ஜனாதிபதி முடிவு செய்து இந்த மாற்றங்களை செய்துள்ளார்.

ஊடகவியலாளர் கேள்வி - இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு போடுவது போதுமானதா?

நிச்சயமாக,   மக்கள் சுகாதார ஆலோசனைகளை  பின்பற்றியிருந்தால் ஊரடங்கு விதிக்க வேண்டிய அவசியமில்லை.    மூடுவது பற்றி மட்டும் ஏன்  பேசுகிறார்கள்.    சுகாதார வழிமுறைகளை பின்பற்றி  வாழ்ந்தால், இந்த பிரச்சினைகள் பற்றி நாம் யாரிடமும் பேசத் தேவையிருக்காது. 

அவ்வாறானால் சுகாதாரத் துறைக்கும்  ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட வேண்டியிருக்கும். மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்குத் தான் இந்  தொற்று அதிகம் பரவியிருக்க  வேண்டும். அவர்கள் தான் இதில் அதிகம் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதால்தொற்றை  தவிர்க்கிறார்கள்.  தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை தான் மக்கள் செய்ய வேண்டும் . கன்னத்தில் முகமூடியை 

அணிவது அல்லது காது பக்கத்தில் தொங்கவிட்டு கோவிட்  பரவி விட்டது என்று கத்துவது பயனற்றது. முதலில் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நிலைமையின் பின்னணியில்   முற்றிலும்   இருப்பது அரசியல் தான். இது  ஆர்ப்பாட்டம் நடத்தும் நேரம் அல்ல  .எல்லா  இடங்களிலும் சென்று போராட்டம் நடத்தினார்கள்.இது வெளியில் இறங்கும் நேரமா?  இப்பொழுது தான் இவர்களுக்கு சுகாதாரம் பற்றி நினைவிற்கு  வந்திருக்கிறது.  இந்த நாட்டு மக்கள்  சாகும் வரை எதிர்க்கட்சியினர் காத்திருக்கின்றனர்.  நாட்டை மூடுமாறு  எதிர்க்கட்சிகள்  கோரின. நாட்டை  மூடும்போது மீண்டும் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்  கோருகின்றன. இதுதான் இது தான் எதிரணியின்  கணக்கு.  எதிர்க்கட்சிகள்  பொறுப்பற்ற முறையில் செயல்படுவது குறித்து  நாங்கள் வருந்துகிறோம். கோவிட் காரணமாக முழு உலக மக்களும் அவதிப்படும் நேரத்தில்  எதிர்க்கட்சிகள் அதிக பொறுப்புடன் செயல்படுவது நல்லது.  கோவிட்டுடன்  அரசியலை கலக்க வேண்டாம் என்று நாங்கள் சஜித் மற்றும்  திசாநாயக்கவிடம் கோருகிறோம்.

ஊடகவியலாளர் கேள்வி - இந்த மாதத்திற்கான பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை (17 ஆம் திகதி ) மட்டும்தானா?

ஆகஸ்ட் மாத கூட்டத் தொடர்      நாளை மட்டுமே நடைபெறும் ஊடகவியலாளர் கேள்வி - அரிசி விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா? 

திகதி நிறைவடையும்  அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களையும்  நாளை ஆராய இருக்கிறோம்.

ஊடகவியலாளர் கேள்வி - வாகன பாகங்களை இறக்குமதி செய்து  இணைப்பது தொடர்பில்  வர்த்தமானி அறிவிப்பு உள்ளதா?

புதிய வர்த்தமானி அறிவிப்புகள் எதுவும்  கொண்டுவரப்படாது. பழைய வர்த்தமானி அறிவிப்புகளை புதுப்பிப்பதற்காக அவற்றை   பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவோம்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe