Ads Area

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் தோனி...? - விஜய்-தோனி சந்திப்பின் பின்னணி இதுதான்!

நடிகர் விஜய்யை, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி சந்தித்திருக்கிறார்.

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் சர்கார் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

பீஸ்ட் படத்தின் முதல் இரு அட்டவணை படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது, மூன்றாவது அட்டவணை படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியும் சந்தித்திருக்கிறார்கள்.

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் இன்று சென்னையில் அருகருகே நடந்ததுள்ளது. அப்போது இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் படங்களை விஜய் / தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பார்த்தும், பகிர்ந்தும் தங்களை சார்ஜ் செய்துக் கொள்கிறார்கள்!




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe