நாடு முழுவதும் சிமெந்துக்கு பற்றாக்குறை இருப்பதாக கட்டிடப் பொருள் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சிமெந்து பற்றாக்குறையால் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் புதிய வீடு அமைப்பவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சிமெந்து நிறுவனங்கள் தமது நாளாந்த சிமெந்து தேவைகளில் அரைவாசியைக் கூட சந்தைக்கு விடாததே பற்றாக்குறைக்குக் காரணம் என கட்டிடப் பொருள் கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சிமெந்து நிறுவனங்கள் எதிர்காலத்தில் சிமெந்தின் விலையை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்நிறுவனங்கள் தமது விநியோகத்தைக் குறைத்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

