சவுதி அரேபியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குள் நுழைய தடுப்பூசி கட்டாயம்
இன்று முதல் (Aug-1) சவுதி அங்கீகரித்த தடுப்பூசிகளை ஒன்று அல்லது இரண்டு அளவை எடுத்தவர்கள் அல்லது வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் மட்டுமே சவுதியில் உள்ள வணிக மையங்கள், மால்கள், மொத்த மற்றும் சில்லரை கடைகள், Markets, உணவகங்கள், கஃபேக்கள், ஆண்கள் முடிதிருத்தும் கடைகள் மற்றும் பெண்கள் அழகு நிலையங்கள் ஆகியவற்றில் நுழைய முடியும்.
அதேபோல் அனைத்து பொருளாதார, வணிக, கலாச்சார, பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் என்று அமைச்சகம் கூறி உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து பயன்படுத்தும்போது தடுப்பூசி நிலையை சரிபார்க்க தவக்கல்நாவை பயன்படுத்தவேண்டும்.
நாட்டின் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக பல்வேறுபட்ட முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
தற்போது சவுதி அரேபியாவிற்கு புதிதாக வந்திருப்பவர்கள், விசிட் விசாவில் உள்ளவர்களும் தடுப்பூசி எடுக்காமல் இருந்தால் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.