முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரிஷாத் பதியுதீனின் குடும்ப சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் rushdhie Habeeb தெரிவித்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பானவிசாரணைகள் கட்டாயத்தின் பேரில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டயகம சிறுமியின் அம்மாவுக்குப் பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுக்குமாறு பழனி திகாம்பரம், மனோகணேசன், வடிவேல் சுரேஷ் ஆகியோர் வலியுறுத்துவதாக அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டு தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து சமூகத்தில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி தாக்கப்பட்டதாகப் பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்து என்ன?
ஆரம்பத்தில் சாதாரண பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.
கடந்த ஜூன் 03ஆம் திகதி குறித்த சம்பவம் இடம்பெற்றது. அன்றைய தினமே பொரளை பொலிஸார் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினது கைரேகை பரிசோதனைகள், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினர், குற்றப் புலனாய்வுத் திணைக் களத்தினர், அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் வருகை தந்தனர்.
முதல் நாளே குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சிறுமி உயிரிழக்கும் வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சிறுமி உயிரிழந்த இரண்டு நாட்களில் விசாரணை திசை திரும்ப ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பத்தில் அரசியல்வாதிகள் தலையிட்டனர். இந்தச் சம்பவத்தை மறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
எந்த அரசியல் வாதிகள் குறித்த சம்பவத்தில் தலையிட்டனர்?
பொரளை பொலிஸ் நிலையத்துக்கு பழனி திகாம்பரம், மனோகணேசன், வடிவேல் சுரேஷ் ஆகியோர் சென்றனர். விசாரணை குறித்து அமைச்சர் வடிவேல் சுரேஷ், இராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யார் இந்த வழக்கை முன்னிலைப்படுத்துவது என அரசியல் போட்டிகள் இடம்பெற்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை திசை திருப்பப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது சிறுமி உயிரிழந்த இரண்டு நாட்களில் விசாரணை திசை திருப்பப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் பலவேறு கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முறைப்பாடுகள், எதிர்ப்புகள், பல்வேறு சிக்கல்கள் தோற்றியுள்ளன.
இந்தப் பிரச்சினைக் தீர்வு காண இங்கு வந்து கதைக்குமாறு உங்களுக்கு யார் சொன்னது?
முன்னாள் அமைச்சர் ரிஷாத் தெரிவித்தாரா?
இல்லை
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகள் மற்று சுயாதீன முறையில் இந்த பிரச்சினை யைத் தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித் துள்ளனர்.
சட்டத்தரணி என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத்தை குற்றத் தடுப்பு திணைக்களத்திற்குச் சென்று சந்தித்தீர்களா?
குறித்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் ரிஷாத்தை சந்திக்கவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பாக ரிஷாத்தைக் கைது செய்ய சூழ்ச்சி உள்ளதா?
ஆம் அரசியல் கட்சிகள் மற்றும் அவரோடு தொடர்பு கொண்டு கருத்து பரிமாறிக்கொள்வோர், அவரை கட்சியிலிருந்தும் பாராளுமன்றத்திலிருந்தும் வெளியேற்ற எண்ணுபவர்களும் அவருக்கு எதிராகச் செயற்படுவோர் மற்றும் இன, மதம், மொழி, பொருளா தாரம், சமூகத்தில் பல எதிரிகள் இருப்பதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ரிஷாத்தை அரசியல் கட்சியிலிருந்து வெளியேற்ற யாருக்கு அவசியம் உள்ளது?
அரசியல் கட்சியில் சில அமைச்சர்கள் உள்ளனர்.
சில அமைச்சர்கள் எதிராகவும் , கோபமாகவும் செயற்படுகிறார்கள் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குற்றத் தடுப்பு திணைக்களத்துக்கு வந்தபோது ரிஷாத் உங்களுக்கு என்ன தெரிவித்தார்?
குற்றத் தடுப்பு திணைக்களத்தில் 02 முறை ரிஷாத்தை சந்தித்த நேரத்தில் அவர், சிலர் தன்னோடு முரண்படு வதாகக் கூறியதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தாக்குதலா? தற்கொலையா என்பதை நீங்கள் கூறுங்கள்?
இது அசாதாரண சம்பவமாகும். குறித்த சம்பவத்தைப் பொறுத்த வரையில் அதன் சுற்றுப்புறம் தற்போது வரை கிடைத்துள்ள தகவல் படி இது தாக்குதல் இல்லை தற்கொலை என்றே கூற முடியும்.
பிரேதப் பரிசோதனை மூலம் தற்போது கிடைத்துள்ள அறிக்கை மற்றும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள முரணான கருத்துகளால் மீண்டும் சடலம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி உயிரிழந்தது வரை மேற்கொண்ட விசாரணைகள் சரி என நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆனால் பொலிஸார் வாக்குமூலம் ஒன்று கூட மேற்கொள்ளவில்லை ஏன்? ஏன் வாக்குமூலம் பெறப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குறித்த சிறுமி வைத்தியரிடம் தற்கொலை குறித்து தெரிவித்துள்ளதாக பொலிஸார் பத்திரங்களைப் பையில் சேகரித்து வைத்து அனுப்பி வைத்துள்ளதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது சுய நினைவிலிருந்ததாக தெரியவந்துள்ளது. அதன் பின்னர் சுயநினைவு இழந்துள்ள நிலையில் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையின்படி குறித்த சிறுமி சுய நினைவில் இருந்துள்ளாார். அந்த நிலையில் பொலிஸார் வாக்குமூலத்தை ஏன் பெறவில்லை?
குறித்த சிறுமியிடம் வைத்தியர் விசாரித்திருக்கலாம். ஏன் விசாரிக்கவில்லை? பொலிஸார் ஏன் வாக்குமூலம் பெறவில்லை?
நான் திவயின பத்திரிகையில் பார்த்தேன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 50 ஆயிரம் ரூபா தருகிறோம். இந்த விடயத்தை இவ்வாறு மூடிமறைத்து விடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.இது குறித்து உங்களின் கருத்து....?
ஏதாவது தவறு செய்திருந்தால் தான் குறித்த சம்பவத்தை மூடி மறைக்க வேண்டும் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நீங்கள் ரிஷாத்தின் சட்டத்தரணி என்பதால் நீங்கள் ரிஷாத் பக்கம் தான் பார்ப்பீர்கள். நான் நாட்டுப் பக்கம் தான் பார்க்கிறேன்.
12 நாட்கள் கடந்தும் பொலிஸார் வாக்கு மூலத்தைப் பெறவில்லை. இதில் சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த பரிசோதனையில் நடைமுறை நிலைமையை நாங்கள் பார்க்க வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது சுய நினைவு இருந்தது என்றும் கோமா நிலையில் இருக்கவில்லை என்றும் புரிந்து கொள்ளக் கூடிய தன்மை இருந்ததாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் படுக்கை அறையில் தொங்க விடும் அறிக்கை யில் இது குறித்துத் தெரியவந்துள்ளது. B அட்டையை நான் கவனித்திருக்கிறேன்.
வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது சுயநினைவிலிருந் ததாக படுக்கை அறையில் தொங்கவிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் போது சுய நினைவில் இருந்தாரா என்பது குறித்து படுக்கை அறிக்கையில் பார்க்க வேண்டும் என சட்டத்தரணி கூறினார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மனைவியின் தந்தை ஏன் சிறுமியின் பெயரை மாற்றி 16 வயதை 18 ஆக உயர்த்தியும் 6.20 இடம்பெற்ற சம்பவத்தை 8.30 மணிக்கு 2 1/2 அரை மணி நேரம் கழித்து 119க்கு அழைத்து வைத்தியசாலைக்குச் சென்றது ஏன்?
இது முற்றாகத் தவறு. காணொளி பதிவுகள் இருக்கின்றன.
குறித்த சம்பவம் காலை 6.45க்கு இடம்பெற்றது. காணொளியில் பொதுமக்கள் வருகையை அவதானிக்கலாம்.
07.01க்கு 1990 ஐ தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்கப்பட்டது. 07.10 மணியளவில் அம்புலன்ஸ் வந்தது.
8.30 மணிக்குத் தான் வைத்தியசாலைக் கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது ஆனால் காணொளிப் பதிவுகளில் நேரத்தைப் பார்க்க முடியும். குறித்த அம்புலன்ஸில் தாதியால் பெறப்பட்ட அறிக்கை உள்ளது.
அம்புலன்ஸ் அறிக்கையுள்ளது. அதை மறைக்க முடியாது.
ஏன் இது குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கவில்லை?
நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளோம்
ரிஷாத் பதியுதீன் மனைவி கழிப்பறை சரியாக கழுவா விட்டால் முகத்தை கொமட்டில் அமிழ்த்தி அந்தக் கழிவு நீரால் அங்கு வேலைசெய்த பெண்களைக் குளிப்பாட்டுவார் என்றும் உணவு சாப்பிட்ட தட்டை சரியாகக் கழுவா விட்டால் சாப்பாடு தட்டால் அடித்து தட்டிலுள்ள அசுத்த நீரை முகத்தில் விசுறுவதாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்து என்ன?
இதுதான் புறணி பேச்சு. இதைத்தான் ஊடகங்கள் தெரிவித் துள்ளன. இதை யார் தெரிவித்தது? இந்த விடயம் எங்கு உள்ளது? எவர் இது தொடர்பாக யாரிடம் வாக்கு மூலம் பெற்றது போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீங்கள் குறித்த சிறுமி வீட்டுக்கு சென்றுள்ளீர்களா?
நான் செல்லவில்லை ஆனால் புகைப்படத்தில் பார்த்துள்ளேன்.
குறித்த சிறுமியை வீட்டின் பின்புறத்தில் 6 ஆடி 4 அங்குலம் அறையில் மின் விளக்கு , மின் விசிறி இருக்கவில்லை. நாய் வீடு போன்று இருந்ததாக கூறப்படுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறார் களா?
சட்டத்தரணி: இல்லை
அந்த வீட்டின் வளவுக்குள் சமையல் அறையின் பின்புறத்தில் சிறுமி தங்க அறை வழங்கப்பட்டிருந்தது.
சமையல் அறையின் கதவுக்கு வெளியில் தான் சிறுமிக்கு அறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு மண்ணெண்ணெய் மற்றும் லைட்டர் எப்படி வந்தது ?
வீட்டில் மண்ணெண்ணெய் இருப்பது சாதாரண விடயம்.
நான் கொழும்பில் இருக்கிறேன் இப்போது மண்ணெண்ணெய் கொண்டு வந்து கொடுக்குமாறு சொன்னால் உங்களால் வாழ் நாள் நாள் முழுவதும் கொண்டு வந்து கொடுக்க முடியாது?
சாரதியினால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரிஷாத் பதியுதீன் மனைவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரிடம் கேட்டபோது நான் கொண்டு வரவில்லை என்றும் முன்னதாக பணிபுரிந்த பெண்ணிடம் கேட்ட போது இந்த வீட்டுக்கு ஒருபோதும் மண்ணெண்ணெய் கொண்டு வந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து...
சட்டத்தரணி: நான் கேட்கிறேன் மண்ணெண்ணெய் இருந்தால் என்ன பிரச்சினை?
குறித்த சிறுமியின் அறைக்கு மண்ணெண்ணெய் மற்றும் லைட்டர் எவ்வாறு வந்தது? முதலில் படுக்கை அறையிலிருந்தது. பின்னர் மேசை மேல் எவ்வாறு வந்தது? சிறுமியை தாக்கவா மண்ணெண்ணெய் கொண்டுவரப்பட்டது?
விசாரணைக்கு வரும் அனைத்து அதிகாரிகளும் அதனை எடுத்துப் பார்ப்பார்கள் ஒவ்வொரு இடத்தில் வைப்பார்கள் என்றும்மண்ணெண்ணெய் போத்தல் பிரச்சினையாக இருந்தால் பொலிஸ் அதிகாரிகள் வரும் போது மறைத்துக்கொள்ளலாம் தானே என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் அமைச்சர் வீட்டுக்கு ஏன் மண்ணெண்ணெய் கொண்டுவரப்பட்டது?
வீட்டில் மண்ணெண்ணெய் வைத்திருப்பது பிரச்சினை இல்லை என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமியின் தாய் தொலைபேசியில் அழைப்பு விடுத்ததும் என்னை அடிப்பதாக ஸ்பீக்கரில் இட்டு ரிஷாத் மனைவியின் தொலைபேசியில் தெரிவித் துள்ளார்.
மூன்று நாட்களில் சிறுமியின் தாய் வருவதாகத் தெரிவித்த நிலையில் மிகவும் சந்தோசமான நிலையில் இருந்த குறித்த சிறுமி உயிரிழந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது?
சட்டத்தரணி : குறித்த விடயத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.
குறித்த சிறுமியின் தாயுடன் கலந்துரையாடி யார் குறித்த விடயம் தொடர்பாகத் தூண்டுவது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
குறித்த சம்பவம் தொடர்பாகத் திரை விமர்சனம் யார் செய்கிறார்கள் என்பதை நீதிமன்றத்தின் ஊடாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தற்போது வரை ரிஷாத் பதியுதீன் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படவில்லை, சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இது தொடர்பாக உங்களின் கருத்து?
சட்டத்தரணி : இல்லை
ரிஷாத் பதியுதீன் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றும் சந்தேக நபராக அடையா ளம் காணப்படவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கொரோனா முடிந்து கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி ரிஷாத் சிறைச்சாலையில் இருந்து வெளியாகி 2021 ஏப்ரல் மாதம் குற்றத்தடுப்பு பிரிவினர் அழைத்துச் சென்றனர். குறித்த காலத்தில் அந்த வீட்டில் தானே தங்கியிருந்தார்.
சட்டத்தரணி : ஆம்
ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 11 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் இது குறித்து உங்கள் கருத்து என்ன?
சட்டத்தரணி: 11 என்ற இலக்கம் எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. பொலிஸாரிடம் விசாரிக்க வேண்டும்.
இதற்கு முன்னதாக பணிபுரிந்த பெண்கள் இருக்கிறார்கள். சங்கரின் மகள் கடந்த ஐந்து வருட காலமாக இங்கு முன்னதாக பணிபுரிந்துள்ளார்.
இறுதியாக வந்த இரு பெண்கள் இவ்வாறு உயிரிழந் துள்ளனர் என்றும் சங்கர் என்ற நபர் பல இடங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவறும் பாதிக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மற்றொரு பெண் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் இது குறித்து...
உடல் நலக் குறைவால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என ஊடகங்கள் சிறிய விடத்தைப் பெரிதாக விரித்துக் காட்டுகின்றன என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மற்றொரு மைத்துனர் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோ கத்துக்கு உட்படுத்திய குற்றத்துக்காக கடந்த 2007 மே 29 அன்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முகமது ஹனீப் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் சிறை இலக்கம் 17462 இன் கீழ் வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார், மேலும் 2016 ஆம் ஆண்டு அவரது தண்டனைக் காலம் நிறைவடைந்த நிலையில் அவர் சிறையிலிருந்து வெளியேறியமை தெரியவந்துள்ளது. இது குறித்து உங்களின் கருத்து என்ன?
இது உண்மைக்குப் புறம்பானது.
யாருடையதோ சிறை இலக்கத்தையும் பெயரையும் பெற்று ரிஷாத்தின் மைத்துனர் என தெரிவிப்பது அசாதாரண நிலையாகும். எவரும் இவ்வாறு இல்லை இது தான் உண்மை.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் ரிஷாத்தின் மைத்துனர் மற்றும் பணி புரிந்த ஆண் ஒருவரும் வசித்துள்ளனர். பாலியல் துஷ்பிரயோக சம்பவம் குறித்து உங்களின் கருத்து என்ன?
குறித்த சிறுமியின் உடலைப் பரிசோதனை செய்த போது 30 வருட பெண்ணின் உடல் போன்றும் யோனி மூலமாக தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற் குட்பட்டதாகவும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது ?
பரிசோதனையில் தொடர்ந்தும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி 12 வயதிலிருந்து 16 வயது வரைக்கும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
குறித்த சிறுமியின் தாயார், சிறுமி எந்தவொரு இளைஞருடனும் பழகவில்லை எனக் கூறியுள்ளார்?
எந்த ஒரு அம்மாவும் அவ்வாறு தானே கூறுவார்கள். இது அசாதாரண சம்பவம் என்றும் இது தொடர்பாக விசாரணை மூலம் அறிந்துகொள்ளலாம்.
தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணையில் நம்பிக்கையுள்ளதா?
சுயாதீன சாதாரண விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தற்போது எனது மகள் தொடர்பாக இஸ்லாமியர் கள் பரிசோதனையை முன்னெடுப்பதால் குறித்த விசாரணையில் நம்பிக்கை இல்லை எனவும் சிறுமியின் தாயார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் போது கட்டாயப்படுத்துவதால் உள ரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம். இதை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இங்கு அரசியல் போட்டி நிலவுவதால் யார் முதலில் செய்வது என்ற பின்னணியில் குறித்த சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
டயகம சிறுமியின் சம்பவம் தொடர்பாக விசாரணைக் கோணம் திசை திருப்பப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
செய்திக்கு நன்றி - தினக்குரல்