Ads Area

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு, 20ஆயிரத்தை தாண்டியது!

( காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது. மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பிரதேசங்கள் அபாயகரமாக மாறி இருந்தது. எனினும் இடை நடுவில் சற்று தணிந்திருந்த போதிலும் கடந்த இருவார காலமாக அந்நிலைமை மாறி தற்போது படுவேகமாக தாக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக கல்முனை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கூடுதலான தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது.

தொற்றுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று (02) திங்கட்கிழமை பதிவின்படி எண்ணிக்கை 20 ஆயிரத்து 21 ஆக உயர்ந்துள்ளது என கிழக்கு மாகாண சுகாதார சேவைத் பணிப்பாளர் டர்க்டர் ஏ.ஆர்எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 350ஜ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 364 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 339 பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டு.மாவட்டத்தில் 103 பேரும்  அம்பாறை பிராந்தியத்தில் 39 பேரும் திருமலை மாவட்டத்தில்   148 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 74 பேரும் மரணித்துள்ளனர். இறுதியாக சாய்ந்தமருதில் ஒருவர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்.



நேற்று (2) வரை 20021 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில்  18529 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர் 1136 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

10 லட்சம் பேருக்கு தடுப்பூசி தேவை!

கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசிக்கு தகுதி பெற்றவர்களாக  10 லட்சத்து  40 ஆயிரத்து 471 பேர் உள்ளனர். இதுவரை 6 லட்சத்து 65 ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக்  தெரிவித்தார்.

மட்டு.மாவட்டத்தில் 227953 பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 112089 பேருக்கும் திருமலை மாவட்டத்தில்   163863 பேருக்கும் கல்முனைப்பிராந்தியத்தில் 161444 பேருக்கும் தடப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணத்திற்கு இதுவரை 8 லட்சத்து 50 ஆயிரம் வக்சீன்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் முதலாவது டோசாக 7 லட்சத்து 75 ஆயிரம் வக்சீன்களும் இரண்டாவது டோசாக 75 ஆயிரம் வக்சீன்களும் கிடைக்கப்பெற்றன.

இவற்றில் முதலாவது டோஸில் கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட 7 லட்சத்து 75 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகளில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 238 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக்  மேலும் தெரிவித்தார்.

மட்டு.மாவட்டத்தில் 204406 பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 89485  பேருக்கும் திருமலை மாவட்டத்தில்   138903 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன. இறுதியாக கிடைக்கப்பெற்ற கல்முனைப் பிராந்தியத்தில் முதல் டோசாக இதுவரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 44 பேருக்கு வக்சீன்கள் மிகத்துரிதமாக ஏற்றப்பட்டுள்ளன.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe