சம்மாந்துறை அன்சார்.
அமீரகத்தில் வாகன உரிமையாளர்களின் அனுமதியின்றி யாராவது அவர்களது வாகனத்தை ஓட்டிச் சென்றால் 10 ஆயிரம் திர்ஹம் அபராதமும், ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என வாகன ஓட்டிகளை அமீரக பொது வழக்குத் துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ டுவிட்டரில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமீரக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 394 -ன் படி எவரேனும் ஒருவர் உரிமையாளரின் ஒப்புதல் இன்றி அல்லது அவரது வாகனத்தை ஓட்டுவதற்கான முறையான அனுமதி இன்றி உரிமையாளரின் காரையோ, ஸ்கூட்டிகளையோ, மோட்டார் சைக்கிள்களையோ ஓட்டிச் சென்றால் அவர்களுக்கு 10 ஆயிரம் திர்ஹம் அபராதமும், ஒரு வருடத்திற்கு குறையாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
முன்னதாக, செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் இல்லாதோர் எந்த மோட்டார் வாகனத்தையும் சாலையில் ஓட்ட வேண்டாம் எனவும் அவ்வாறு செய்யும் எவருக்கும் 50,000 திர்ஹம் வரை அபராதமும் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.