தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆப்கானிஸ்த்தானுக்கான தங்களது விமான சேவையினை நிறுத்தியுள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆப்கானிஸ்த்தானின் எதிர்கால நடவடிக்கைள், விமான நிலையங்களின் பாதுகாப்பு போன்றவற்றினை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.