(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் விவசாய பாட ஆசிரிய ஆலோசகரான பி.இஸ்மாயில், தனது 33வருட கல்விச்சேவையிலிருந்து இன்று (24) ஓய்வுபெறுகிறார்.
சம்மாந்துறையைச் சேர்ந்த இஸ்மாயில் 17 வருடங்கள் ஆசிரிய சேவையிலும், 15 வருடங்கள் ஆசிரிய ஆலோசகராகவும் சேவையாற்றியிருந்தார்.
இவர் தனது ஆரம்ப இடைநிலைக் கல்வியை சம்மாந்தறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் ,உயர்கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவிதியாலயத்திலும், பூர்த்தி செய்து விவசாய டிப்ளோமாப் பயிற்சியை அம்பாறை ஹார்டி உயர் தொழினுட்பக் கல்லூரியில் பூர்த்தி செய்தவராவார்.
இவர் சாளம்கைப்கேணி அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயம், அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி ,தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் 17 வருடகாலம் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு பாரிய வரவேற்பைப் பெற்றவராவார்.
ஜனாப் இஸ்மாயில் சம்மாந்துறையைச் சேர்ந்த அலியார் பைக்கீர்தம்பி ,இஸ்மாலெவ்வை பாத்துமா தம்பதிகளின் புதல்வராவார்.
விவசாய பாட ஆசிரிய ஆலோசகரான பி.இஸ்மாயிலின் ஓய்வையொட்டி, வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் பணிமனைசார்பில் அவரது அர்ப்பணிப்பான தன்னலமற்ற ஆத்மார்த்தமான சேவையைப்பாராட்டி வாழ்த்தியுள்ளார்;.