Ads Area

உலக சுகாதார ஸ்தாபனம் இத்தருணத்தில் பின்தங்கிய பிரதேச சுகாதார அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனம் இத்தருணத்தில் பின்தங்கிய பிரதேச சுகாதார அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதான காரியாலயத்தில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை  மேம்பாட்டு   இராஜாங்க அமைச்சர்  சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான தலைவர் வைத்தியர் அலங்கா சிங் மற்றும் உலக சுகாதார அமைப்பின் வைத்தியர் ஒலிவியா கோராசன் நிவேராஸ் (சுகாதார நிர்வாகி) பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின  வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை  மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை சந்தித்து வட கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் மற்றும் சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் தற்போது நாட்டில் நிலவுகின்ற உழஎனை-19 தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து  உலக சுகாதார ஸ்தாபனத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் நாட்டில் உழஎனை-19 தொற்றை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் பூரண உதவி பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

தடுப்பூசி வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாண மக்கள்இ பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு முன்னுரிமையளித்து விசேட திட்டமொன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை ஒன்றை இதன்போது இராஜாங்க அமைச்சரினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டது .மேற்கூறிய அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு திட்டத்தில் WHO அதன் ஆதரவை அனைத்து பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சாதகமான முடிவை வழங்குவதாக றுர்ழு உறுதியளித்தது.

அமைச்சரின் ஊடக இணைப்பாளர் 

ராஜரத்தினம் சுரேஷ்குமார் 0714551010.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe