Ads Area

கிண்ணியாவில் பல பிரதேசங்களில் இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கி வைப்பு.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீனினால் 300 இலவச குடிநீருக்கான இணைப்பை பெறுவதற்கான கட்டண ரிசீட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிண்ணியாவில் குறிஞ்சாக்கேணி, பூவரசந்தீவு, சூரங்கள் மற்றும் வான்எல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதி பிரதேச செயலாளர் பஹீமா றிஸ்வி, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் நிஜாம், கிண்ணியா பொலிஸ் பிரதிப்பொறுப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான நிஹார் ஸலாம், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான கன்சுலா மற்றும் ஜிப்ரி ஆகியோருடன் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிண்ணியாவுக்கான மகளிர் அணித் தலைவி ஜரீனா ஆகியோருடன் பெண்கள் மனித உரிமை அமைப்பின் தலைவியும் சமூக சேவகியுமான நளீமா, ஊடகவியலாளர் இர்ஷாத் இமாமுத்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe