Ads Area

புதிய களனி பாலத்தை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஆலோசனை.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும்  நெடுஞ்சாலை அமைச்சராகவும் செயற்பட்ட 2014 இல்  பூர்வாங்க திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட இலங்கையில் முதல் உயர் தொழில்நுட்ப கேபிள்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தை  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கவர்ச்சியாக  ஒளிமயமாக்குமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த 2021-07-04 ஆம் திகதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம் முக்கிய காரணியாக இருக்கும் என்பதால் களனி ஆற்றினதும் பாலத்தினதும் இயற்கை அழகை வெளிப்படுத்த இந்த  ஒளிமயமாக்கல் பங்களிக்கும் என  அமைச்சர் கூறினார். எனவே, வளர்ந்த நாடுகள் பாலங்களை அழகுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி அவை எமது நாட்டுக்கு ஏற்றதாக இருந்தால், புதிய களனி பாலத்திற்கு அந்த நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின் பேரில் புதிய களனி பாலம் 2021-09-13 ஆம் திகதி பரீட்சார்த்தமாக  ஒளிமயமாக்கப்பட்டது.


ஊடகப் பிரிவு

நெடுஞ்சாலை அமைச்சு

0112868710







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe