Ads Area

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார், துாதுவர் ஹம்சா.

சம்மாந்துறை அன்சார்.

சவுதி அரேபியாவுக்கான புதிய இலங்கைத் துாதுவராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பக்கீா் மொஹிதீன் ஹம்சா சவுதி அரேபியா ரியாத் நகரில் உள்ள இலங்கைத் துாதரகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

25 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டு துாதுவா் சேவையில் சேவையாற்றிய பக்கீா் மொஹிதீன் ஹம்சா இலங்கை வெளிநாட்டு அமைச்சில் மேலதிகச் செயலாளா் (பொருளாதாரம் ) துருக்கி நாட்டின் துாதுவா், ஜோகியா, உக்கிரைன், பெல்ஜியம், போ்லின் லண்டன் பதில் துாதுவா் , இந்தியா சென்னையில் பதில் உயா் ஸ்தாணிகா் போன்ற பல்வேறு நாடுகளில் வெளிநாட்டுதுறை சாா்ந்த சேவைகளை திறம்பட செயலாற்றியவா்.

கடமைப் பொறுப்பேற்று நிகழ்வில், துாதரக அதிகாரிகள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe