Ads Area

சாய்ந்தமருதில் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் திறப்பு..!

சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் (Badminton Indoor Court) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைபத்தில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஏ.றபீக், எம்.ஐ.ஏ.அஸீஸ், எம்.வை.எம்.ஜௌபர், ஏ.ஆர்.எம்.அஸீம், கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத் தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர், செயலாளர் அலியார் பைசர், பூப்பந்தாட்ட அரங்கின் ஸ்தாபகரான ஏ.ஆர்.ஆதில் அஹ்னாப், வர்த்தகப் பிரமுகர்களான எம்.எச்.எம்.நௌபர், இக்ரா ஜலால்தீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்ததுடன் மற்றும் பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

-முதல்வர் ஊடகப் பிரிவு





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe