சம்மாந்துறை செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலயத்திலிருந்து ஒய்வு பெற்றுச் சென்ற MTA. றஹீம் மற்றும் MlA. கபூர் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான M.M.A. எஹ்யா , A.ஹபீபா, Mrs. F. சிபானா இர்ஷாட் ஆகியோருக்குமான பிரியாவிடை நிகழ்வும் புதிதாக கடமையேற்ற A.H.M இம்ராஸ், Y.L. சித்தி உசைமா, நபீசுல் ஹக், S.M.பாத்திமா பரஸா ஆசிரிய, ஆசிரியைகளுக்கும், ஹம்ஸிதா பட்டதாரி பயிலுநருக்குமான வரவேற்பு நிகழ்வும் அண்மையில் செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் A. முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் பாடசாலை நலன்புரிக் குழுவின் ஏற்பாட்டில் 28.10.2021 அன்று இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹுதுல் நஜீம் அவர்களும், கெளரவ அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.A.சபூர்தம்பி அவர்களும், கமு/சது அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் M.I.மீராமுகைதீன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.



