Ads Area

ஆறு மாதங்களுக்குப் பின் பாடசாலைகள் இன்று மீள ஆரம்பம் ; மாணவர்களின் வருகை குறைவு.

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

கொரோனா தொற்று காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஆறு மாதங்களுக்குப் பின்னர் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

1 முதல் 05 ஆம் வகுப்பு வரை 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வருகை திருப்திகரமாக அமையவில்லை எனத் தெரியவருகிறது.

தம்புள்ளை, நுவரெலியா, அம்பலாங்கொட, இரத்தினபுரி, குருணாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த நிலை காணப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை இருந்தாலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குறைவாகக் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.

இன்று பாடசாலைகள் ஆரம்பித்தாலும் இன்றும் நாளையும் பணிக்கு வர மாட்டோம் என்று அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அண்மையில் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe