Ads Area

சம்மாந்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்.

சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சம்மாந்துறை பிரதேச சபையும்,  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து முன்னெடுத்தனர்.

மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதினால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய குப்பைகள், டயர்கள், யோக்கட் கப், சுரட்டைகள், மட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலங்கள் சேகரிக்கப்பட்டதுடன் நீர்தேங்கியுள்ள இடங்கள் துப்புரவு செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்ற டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான செயலணியின் கூட்ட தீர்மானத்திற்கமைய சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களின் வழிகாட்டலில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் நடைபெற்ற இவ்வேலைத் திட்டத்தில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.றாசீக்,  பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,  பிரதேச, சபையின் மேற்பார்வை உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe