அண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருமான பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வுகள் கட்டம் கட்டமாக ஒவ்வொரு பிரதேச மட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக வாழ்வில் மகுடம் தரிக்கும் தரிக்கும் நல்லடைவுகளைப் அடைந்தோரை வாழும் போதே வாழ்த்தும் வகையில் நிந்தவூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக சமூகம் சார்பாக. (நிர்வாக, கல்விசாரா ஊழியர்கள்) தென் கிழக்கு பல்கலைக்கழக ஐந்தாவது உபவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை பாராட்டி கெளரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யபப்பட்ட "வாழ்வோரை வாழ்த்துவோம்" நிகழ்வானது 2021.11.21 (ஞாயிற்றுக்கிழமை) தோம்புக் கண்டம் விலேஜ் றிசோட்யில் பல்கலைக்கழக பதிவாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது.
நிந்தவூரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக சமூகம் சார்பாக. (நிர்வாக, கல்விசாரா ஊழியர்கள்) நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் உபவேந்தர் தாய், மனைவி, குழந்தைகள், குடும்பத்தவர்கள், சகோதரன் என பலரும் கலந்துகொண்ட இன்நிகழ்வில் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
ஊடக செய்திகளுக்காக..!
முஸ்தபா முபாறக்




