Ads Area

குவைத்தில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற இளைஞர் உயிரிழப்பு.

குவைத்தில் சாலையைக் கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார்(29) என்ற இளைஞர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இந்த விபத்து கடந்த திங்கட்கிழமை குவைத்தின் பிரபலமான அப்துல்லா முபாரக் வீதியில் கடக்கும்போது நடந்து என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இவர் இந்தியா, தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், சிம்மன்குடியைச் சேர்ந்த மறைந்த குமரன் மற்றும் தனலட்சுமி தம்பதியரின் மகனாவார். ராஜேஷ் கடந்த மூன்று வருடங்களாக குவைத்தில் வேலை செய்து வருகிறார். உடலை இந்தியா எடுத்துச்செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe