Ads Area

குவைத்தில் 493 சாராய பாட்டில்களுடன் சிக்கிய மினி பஸ்..

போக்குவரத்துதுறை சார்பில்  ஜூம்மா ஸூக்கிற்கு அருகாமையில் விதிகளை மீறுபவர்களை கைது செய்வதற்கும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ​​சந்தேகத்திற்கு இடமான வகையில் மார்கெட் முன்பு யாரும் இல்லாமல் மினி பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது.

பேருந்தை சோதனை செய்ததில் 493 தண்ணீர் பாட்டில்கள் இருந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அது உள்நாட்டில் காய்ச்சிய சாராயம் என தெரியவந்துள்ளது. 

493 மதுபான பாட்டில்களுடன் இருந்த வாகனத்தை போக்குவரத்து போலிஸார் கைப்பற்றியதுடன் உரிமையாளரின் அடையாளத்தை அறிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

மேலும் இந்த சோதனையின் போது ஓட்டுநர் உரிமம் இல்லாத 12 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் போக்குவரத்து சட்டத்தை மீறியதற்காக 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe