சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை மஸ்ஜிதுல் முஅல்லா பள்ளிவாசலில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் போது மழையிலிருந்து பாதுகாப்புப் பெற அதற்கான கூடாரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது.
சம்மாந்துறை மஸ்ஜிதுல் முஅல்லா பள்ளிவாசலில் நீண்ட காலத் தேவையாகவிருந்த ஜனாசாக் கூடாரம் ஒன்றினைப் பெற்றுத் தருமாறு பள்ளிவாசல் நிருவாகத்தினர் அஸ்மி யாசீன் அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இக் கூடாரமானது ஜனாசா நலம்புரி அமைப்பினர் முன்னிலையில் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மஸ்ஜிதுல் முஅல்லா பள்ளிவாசல் மையவாடியில் மழைக்காலங்களில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் போது ஜனாசா நல்லடக்கத்தில் ஈடுபடுவோர் மழையில் நனைவது, ஜனாசாக் குழிகளில் மழைநீர் தேங்குவது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில் இதனை நிபர்த்தி செய்யும் முகமாகவே சமூக சேவையாளர் அஸ்மி யாசீன் அவர்களினால் ஜனாசாக் கூடாரம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மஸ்ஜிதுல் முஅல்லா பள்ளிவாசல் தலைவர் பீ.டி.எம். இஸ்மாயில், சம்மாந்துறை நலன்புரி அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



