பாறுக் ஷிஹான் - முஹமட் நாஸீம்.
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் பெண் உட்பட மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் தியோட்டர் வீதிக்கருகில் வைத்தே பெண் உட்பட மூவர் 80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் திங்கட்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான மூவரும் நிந்தவூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், சுமார் 51, 27, 18 வயதுள்ள சந்தேக நபர்களாவர்.
அரச புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைதாகிய சந்தேக நபர்கள் மற்றும் சான்றுப்பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட நபர்களை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

