Ads Area

காதல் விவகாரம் காரணமாக சித்தப்பா தாக்கியதில் 14 வயது பாடசாலை மாணவி பலி!

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்டெம்பல் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக சிறுமியின் சிற்றப்பா நேற்று (21) அவரை தாக்கியுள்ளார்.

பின்னர் நேற்று அதிகாலை சிறுமி உடல்நிலை சரியில்லாமல் புலம்பியபோது, ​​சிறுமியின் தந்தை மீண்டும் சிறுமியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் மயக்கமடைந்த சிறுமயை கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளையில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய நிபுனி நுவந்திகா பண்டார என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை மற்றும் சிற்றப்பா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe