Ads Area

ஒரு சமூகமாக நாம் டாக்டர் ஷாபியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - சிங்கள வைத்தியர் Dr. Najith Indika வின் பதிவு.


கீழுள்ள கடிதத்தை இன்று காணக்கிடைத்தது.  அதைப் பார்த்ததும் எனக்கு முதலில் மனதில் வந்தது சந்தோஷம்தான்.  ஏனென்றால், நாடு முழுவதும் ஒன்று கூடி, ஒரு மனிதனுக்கு செய்யக்கூடாத மிக மோசமான காரியத்தை பல ஆண்டுகளாகச் செய்த பின்னராவது அந்த மனிதனுக்கு சற்று "நியாயம்" வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து கோபமும் விரக்தியும் வந்தது. 

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த அநீதி நடந்தேறிய விதத்தினை ஞாபகப்படுத்திப் பாருங்கள்!

முதலாவதாக, "தேசிய நாளிதழ்" என்றழைக்கப்படும் ஒன்றில் இந்த மருத்துவருக்கெதிராக எந்த ஆதாரமும் அடிப்படையும் இல்லாமல் மிகப்பெரும் (அவதூறு) குற்றச்சாட்டினை சுமத்தி சேறுபூசும் கடிதம் ஒன்று வருகிறது. குற்றச்சாட்டானது சிசேரியன் அறுவை சிகிச்சையின் போது சிங்கள தாய்மார்களின் கருமுட்டை (பலோபியன்)குழாய்களை அடைத்து அவர்களுக்கு மலட்டுத்தன்மை அல்லது கருத்தரிக்காநிலையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. 

யோசியுங்கள்.  விளையாட்டு இல்லை .  அறுவை சிகிச்சையின் போது சிங்கள தாய் ஒருவருக்கு முஸ்லிம் வைத்தியர் கருத்தடை செய்கிறார்.  அக்கால சூழ்நிலைக்கேற்ப பார்த்தால்  கூற்றுப்படி"இன பேதமற்ற நல்லாட்சி அரசாங்கம்" நாட்டை ஆண்ட காலம் அது.  முஸ்லீம் மக்கள் நாட்டைக் கைப்பற்றுவதற்கு (இன) "விரிவாக்கவாதத்திற்கு" போட்டியிட்ட காலம்.  (இப்போது அவர்களுக்கு 5 வருடங்கள்இடைவேளை. ராஜபக்சக்கள் வீழ்ந்தால் மீண்டும் நாட்டைக் கைப்பற்றுவார்கள்.)

மலட்டு கொத்து, கருத்தடை ப்ரா, கருத்தடை (ஜங்கி)ஜீன்ஸ், கருத்தடை தொப்பிகளுக்கு மத்தியில் “கருத்தடை டாக்டரும்” வருகிறார்.

மீண்டும் யோசித்துப் பார்த்தால், இது எவ்வளவு அசிங்கமானது, கொடூரமானது, பாவமானது என்பதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும்.

அந்தச் சம்பவம் தொடர்பாக பெரும்பாலான மருத்துவர்களின் நடத்தைதான் எனது மிகப்பெரிய கவலை.  இது மிகவும் அசிங்கமானது.  அவர்களுக்கு உண்மை தெரியும்.  பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள் இப்படி கருக்கலைப்பு செய்யப்பட்டார்கள் என்று சொல்வது எவ்வளவு பொய், அசிங்கமான கேலிக்கூத்து என்பதையும் அவர்கள் அறிவர்.  அது தெரிந்தும் அவர்களில் பெரும்பான்மையினர் மௌனம் சாதித்தனர்.  மற்றவர்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர்.

அவ்வாறு சாதகமாக பயன்படுத்தியவருள் முதன்மையானவர்தான் பேராசியர் சன்ன ஜயசுமன.  அதுரலியே ரத்ன, விமல் வீரவன்ச போன்ற "நன்கு அறியப்பட்ட" பேரின வாத ஒட்டுண்ணிகளைப் பற்றிப் பேசி பயனில்லை.

ஆனால் பேராசிரியர் சன்ன ஜயசுமண அப்போது ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவ மாணவர்களுக்கு கற்பிக்கும் பேராசிரியர்.  அவரது எதிர்கால அரசியல் பாதையை திறந்து கொள்ள, அவருடன் தனிப்பட்ட முரண்பாடுகள் எதுவும் இல்லாத இந்த முஹமட் ஷாபி எனும் முஸ்லீம் மருத்துவரொருவரின் வாழ்க்கையை, தொழில் எதிர்காலத்தினை, அவரது குடும்பத்தாரின், உறவினரின் வாழ்வை மட்டுமன்றி ஒட்டுமொத்த முஸ்லீம் வைத்தியர்களின் வாழ்க்கையுடன் பயங்கரமான அசிங்கமான அவரது சொந்த வார்த்தைகளில் கூறின் "துப்பாஹி" எனும் கீழ்த்தரமான விளையாட்டை விளையாடுகிறார்.

"வைத்தியர் ஷாபி சிசேரியன் பண்ணுகின்றபோது கருத்தடை செய்தார்" என்ற கதையை வாரியபொல, மெல்சிறிபுர, மாவத்தகமவில் உள்ள சிசேரியன் செய்துகொண்ட சாதாரண கல்வி மட்டமுடைய பெண்கள் ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மருத்துவபீட பேராசியர் ஒருவரால்...??

நினைவூட்டி பாருங்கள்.  அப்போது "ஷாபியால் கருத்தடை செய்யப்பட்ட தாய்மார்களை" ஒன்று திரட்டி ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.  ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், “சிங்களத் தாய்மார்களை அழிக்கும் டாக்டர் ஷாபி”க்கு எதிராக சமூக ஊடகங்களில் பாரிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்.  அவர் அப்போது பெரிய VOGயான ரத்தன தேரருக்கு இரண்டாவதாக கூட இல்லை.

சமூக வலைத்தளங்களில் நான் சன்ன ஜயசுமனவை தனிப்பட்ட முறையில் எதிர்கொண்ட ஒரே சந்தர்ப்பம் இதுவாகும்.  அந்த அசிங்கமான பிரச்சாரத்தை அவர் செய்துகொண்டிருந்தபோது, ​​அவருடைய முகநூல் கணக்கில் அவைகளுக்கு எதிராக வாதிட்டு சில கருத்துக்களை இட்டேன்.  24 மணி நேரத்திற்குள் எங்கள் படித்த, புத்திக்கூர்மையான, தொழில்வான்மை பேராசிரியர் என்னை பதிலளிக்க விடாமல் ப்ளொக் செய்து விட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தத் தருணத்தில், டாக்டர் ஷாபி உட்பட அனைத்து முஸ்லிம் மருத்துவர்களும் இந்தப் புராணக் கட்டுக்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றபோது, ​​அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தரப்பினர் என்ன செய்தார்கள்?

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ன செய்தது?

குருநாகல் வைத்தியசாலையின் சக வைத்தியர்கள் என்ன செய்தார்கள்?

 குருநாகல் வைத்தியசாலை நிர்வாகம் என்ன செய்தது?

அவர் ஒரு சாதாரண மருத்துவர்.  அவர் செய்த அனைத்து சிசேரியன்களும் நிபுனர்கள் அல்லது யாரேனும் ஒருவரின்கீழ் செய்யப்பட்டன.  அப்படி பல்லாயிரக்கணக்கான சிசேரியன் செய்தாரெனில் அந்த லிஸ்ட்டிலே அவருடன் இருந்த VOGக்கள் என்ன செய்தனர்?

இலங்கையில் உள்ள அனைத்து மகப்பேறு மருத்துவர்களும், விசேட மகப்பேறு மருத்துவர்களும், அவர்களின் சக பளு தூக்கும் கனிஸ்ட (ஜுனியர்) வைத்தியருக்காக இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தபோது என்ன செய்தார்கள்?

ஒரு சமூகமாக நாம் என்ன செய்தோம்?

அந்நேரத்தில் இவர்கள் எல்லாம் செய்தவற்றை சொன்னவற்றை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் சியால்கோட் நகரின் மையப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு தனி நபர் எரித்துக்க் கொல்லப்பட்டார்.  இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  நம்பவே முடியவில்லை.

"சிங்கள சமூகம்" மூன்று வருடங்களுக்கு முன்னர் குருநாகலில் உடலுக்கு அடிக்கவோ எரிக்கவோ செய்யாவிட்டாலும் அதே கொடூரத்தையே செய்தது. 

முழு சமூகமும் ஒன்று கூடி, ஒரு தனி மனிதனைச் சுற்றி வளைத்து முடித்தது.  எந்த ஆதாரமுமின்றி குழப்பமொன்றுக்கு செட் ஆகியது.  பொலு முங்குரு (கம்பு தடி) வீரவன்சக்கள், அத்துரலியே ரத்தனக்கள் இனவாத மொட்டுக்கள் சார்பான ஊடகங்களை கொண்டு வர ஜயசுமனக்கள் நெருப்புடன் உள்ளே வந்தபோது, ​​(மக்களில்)பெரும்பாலோர் ஆர்ப்பரித்தனர். ஆரவாரம் செய்தனர்.

குறைந்தபட்சம் இப்போதாவது நேர்மையாக சிந்திக்க முடிந்தால், ஒரு சமூகமாக அது நமது எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.  (எதிர்காலம் இருந்தால்)

அதே போன்று டாக்டர் ஷாபிக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுக்க அந்த நொடியில் அது போதாதென்றாலும், களத்தில் உறுதியாக நின்று  "இது தப்பு. இந்த நாய் வேலையைச் செய்யாதே!" என்று அன்றைய பெரும் அலைக்கு எதிராக குரல்கொடுத்த (சில பயனுள்ள)  மனிதர்களை பாராட்டுகிறேன்.

ஒரு மனிதனாக, இந்த கேவலமான செயலால் டாக்டர் ஷாபிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், முஸ்லிம் மருத்துவர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை இக்கட்டுரையால் மாற்ற முடியாது.  ஆனால் கோத்திரவாத அரசும் கோத்திரவாதத்தை விரும்பும் மக்களும் இருக்கும் இச்சமூகத்தில் இதுவும் பெரிய விஷயம்.

ஏனென்றால் இப்படிப்பட்ட சமூகத்தில் அவருக்கு இழப்பீடு எதுவும் கிடைக்காது.

பதிவு : வைத்தியர் நஜித் இந்திக்க

மொழிமாற்றம்: அல் அமீன் ஏறாவூர்


We as a society must apologize to Dr. Safi! - 

Najith Indika

....................................................................................

Got to see the article below today. When I saw that, the first thing that came to my mind was a happiness. Well, after years of doing the worst thing a man can do, the whole country is getting some ′′ justice ′′ for that man.

Next was anger and frustration. Remember how that incident happened two to three years ago.

First of all in a so-called ′′ national newspaper ′′ goes a mud letter against this doctor with no evidence or basis. The accusation is of blocking the palopian tubes of Sinhalese mothers while performing cesarean surgeries and making those women into alcoholism, or infertility. Think about it. No games. A Muslim doctor has sterilized Sinhalese mothers during an operation. According to the plot, that was the time when the ′′ Yahapalana government without a nation ′′ ruled the country. When Muslims were ′′ expansion ′′ to take over the country. (Now they're interval for 5 years. Only if Rajapakshala falls again, they will take over the country again. )

Among the sterilized kottu, sterilized brashiers, sterilized underwear, sterilized toppies a ′′ sterilizing doctor ′′ comes.

If you think back now, any donkey should be able to understand what an ugly, animal, sinful act this is.

My biggest regret is the behavior of most doctors regarding that incident. It's so ugly. They know the truth. I know how fake and dirty it is to say that thousands of mothers have been sterilized like this. Knowing that, most of them keep the face. More people use this to their own advantage.

Professor Channa Jayasumana is number one among the people who did that inconvenience. There is no point in talking about ′′ well known ′′ parasites like Athuraliya Rathana, Wimal Weerawansha.

But Professor Channa Jayasumana was then a professor who teaches medical students at the medical faculty of Rajarata University. He open his future political path, the life of this Muslim doctor Mohammad Safi who has no arose with him personally, the future of his career, not only the lives of his family relatives, but the lives of all the doctors belonging to the entire Muslim nation are horrible, ugly, in his own words I'm playing a game of thuppa if I say. ′′ The story of Dr. Safi sterilized the mothers while performing Caesar ′′ is understandable to welcome women with a level of general education who have undergone Caesarean surgery in Wariyapola, Malsiripura, Mawathagama, but a professor in a medical faculty??

Just remember and see. At that time, ′′ Mothers who were sterilized by Safi ′′ are even building an organization. He's meeting the media, doing a huge campaign on social media against ′′ Dr. Safi extinction of Sinhalese mothers He won't even be second to the great VOG Rathana Thero at that time.

This is the only time I personally met that person Channa Jayasumana on social media. I made some comments arguing against the posts on his Facebook account while he was doing that ugly campaign. Happy to say 24 hours ago our educated, intelligent, and advised professor blocked me for not being able to answer them.

At that moment, when this eye-blinking myth was trying to object all the Muslim doctors including Dr. Safi, what did the party that should protect them do for it?

What did the unions of doctors do?

What did the fellow doctors of Kurunegala hospital do?

What did the administration of Kurunegala Hospital do?

He's just an ordinary doctor. All the cesarean surgeries he did was under some specialist doctors. He did tens of thousands of cesarean surgeries like that means what did he do to the VOGs on that list?

What did all the feminine and pedestrian doctors in Sri Lanka and their colleges do for the junior doctor who pulled their weight when such an accusation was hanged?

What did the rest of us do as a society?

Let's recall what all these people did at that time.

Two weeks ago, a single man was beaten, burnt to death in front of thousands in the middle of Sialkot city in Pakistan. Everyone was shocked by that. Just couldn't believe it.

Even though the body was beaten and not burnt, the ′′ Sinhalese society ′′ did the same thing in Kurunegala three years ago. Whole society together, surrounded and finished a single man. Set up for no foundation -less messing. When Polumunguru Weerawanshala, Athuraliye Rathana, were brought by the racist bud-friendly media, and Jayasumala came with fire, most of you put a hooray encouraging them. Just had a shout out.

If we could at least think about it now, it would be very important for our future as a society. (If there was a future)

And even if it wasn't enough at the moment to prevent the damage done to Dr. Safi, firmly put his feet down against the big rally, ′′ This is wrong Salute to a handful of people who shouted ′′ Don't do this dog thing

As a human being, this article cannot reverse the damage that Dr. Safi, his family, and Muslim doctors have done by this miserable act. But this is a big deal in a society where there is a tribal rule and people who love tribalism.

Because in a society like this he doesn't get compensated.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe