Ads Area

அமீரகத்தில் 67 இடங்களில் போதைப்பொருள் கடத்திய ஆசிய நாட்டுக் கும்பல் கைது.

சம்மாந்துறை அன்சார்.

அமீரகத்தில் 67 இடங்களில் போதைப்பொருள் கடத்திய கும்பல் ஒன்றை ராஸ் அல் கைமா பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 முதல் 30 வயதுடையவர்களாவர்.

ராஸ் அல் கைமா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு பின்னர் அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர் என போதைப்பொருள் தடுப்பு பிரிவின் இயக்குனர் கர்னல் இப்ராஹிம் ஜாசிம் அல் துனைஜி தெரிவித்தார்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து 999 என்ற எண்ணில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்குமாறு குடியிருப்பாளர்களை கர்னல் அல் துனைஜி கேட்டுக் கொண்டுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe