Ads Area

குவைத்தில் ரேஷன் உணவு பொருட்களை விற்றதற்காக இந்தியர் ஒருவர் கைது.

குவைத்தில் ரேஷன் உணவு பொருட்களை விற்றதற்காக இந்தியர் ஒருவர் கைது: விரைவில் நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் குடிமகன் ஒருவரிடமிருந்து  வெளிநாட்டவர் ஒருவர் ஹவல்லி பகுதியில் ரேஷன் உணவுப் பொருட்களை விற்பதாக  குவைத் உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக உள்துறை அமைச்சக குழு அதிரடி நடவடிக்கையில் இறங்கி, ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தை சென்றடைந்தது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன பால், அரிசி, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரின் ஆவணங்களை சரிபார்த்ததில் அவர் இந்தியர் என்பதும், தொழிலாளர் சட்டத்தை மீறியவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். 

சட்ட நடைமுறைகளை முடித்து குவைத்தில் இருந்து நாடு கடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் - குவைத் தமிழ் சோசியல் மீடியா.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe