Ads Area

காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் வெற்றி.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை தவிசாளர் கி.ஜெயசிறிலினால் இன்று (13) 46 வது சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது. 

இவ்வரவு-செலவுதிட்டத்தினை  உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், ச.நேசராஜா, த.மோகனதாஸ், சி.ஜெயராணி, ச.சிசிகுமார், என்.எம்.றணீஸ் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

வரவு-செலவிற்குத் திட்டத்திற்கெதிராக  உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர், ஏனைய உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.பஸ்மீர், எம்.ஜலீல், கே.குமாரசிறி, கே.ஜெயதாசன் ஆகியோர்  வாக்களித்தனர்.

இதனடிப்படையில், காரைதீவு பிரதேச சபை மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினரின் ஆதரவுடன் வரவு-செலவுத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

இதன் போது கருத்துத்தெரிவித்த தவிசாளர், காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி எனக்குறிப்பிட்டார்.

12 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் 7 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe