முற்றிலும் 100 சதவீதம் காகிதமற்ற அரசாக மாறியுள்ளது துபாய் என்று, நாட்டின் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹாம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் அறிவித்துள்ளார்..
துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றுவதற்கான முயற்சியை இளவரசர் கையில் எடுத்தார்.. இதற்காகவே, கடந்த 2018-ல் காகிதமில்லா திட்டத்தையும் அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து, இந்த திட்டம் 5 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது... அவை ஒவ்வொன்றும் துபாய் அரசாங்கத்தின் வெவ்வேறு குழுக்களை பட்டியலிட்டன...
கடைசி 5வது கட்டத்தின் முடிவில், துபாயில் உள்ள 45 அரசு துறைகளும் காகிதமற்றவை, இதன் மூலம், இந்த துறைகள் 1800 டிஜிட்டல் சேவைகளை செயல்படுத்தின என்றும், இது 336 மில்லியன் ஆவணங்களை சேமித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்...இதையடுத்து, உலகின் முதல் காகிதம் இல்லாத அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இதை இளவரசர் ஒரு அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.. "புதுமை, படைப்பாற்றல், மற்றும் வருங்காலத்தில் தீவிரமான கவனம் செலுத்துதல் போன்ற நோக்கங்களில் வாழ்க்கையை அதன் எல்லாவிதமான அம்சங்களிலும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான துபாயின் பயணத்தில் இன்று ஒருபுதிய கட்டத்தின் தொடக்கம் அரங்கேறி உள்ளது.
நாங்கள் காகிதம் இல்லாத அரசாங்கத்திற்கு ஒரு முழு மாற்றத்தை இன்று நிறைவு செய்துள்ளோம்.. எங்களின் தலைமையின் லட்சிய பார்வையை எங்கள் நாட்டு மக்களால் நிறைவேற்றுவதை கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம்.
உலகின் முன்னணி டிஜிட்டல் மூலதனமாக மேம்படுத்த, கஸ்டமர்களின் மகிழ்ச்சியை மேம்படுத்தும் அரசாங்க செயல்பாடுகள், மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் அதன் சுயவிவவரத்தை ரோல்மாடலாக வலுப்படுத்தவும், இந்த நாட்டு மக்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.." என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனங்கள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.